துருக்கியில் 128 மணி நேரமாக இடிபாடுகளில் சிக்கியிருந்து 2 மாத பச்சிளம் குழந்தை உயிருடன் மீட்பு!துருக்கியில் கடந்த 5 ஆம் திகதி ஏற்பட்ட பயங்கர நில நடுக்கத்தில் 128 மணி நேரமாக இடிபாடுகளில் சிக்கியிருந்து 2 மாத பச்சிளம் குழந்தையொன்று உயிருடன் மீட்கப்பட்டுள்ளது. 

துருக்கியில் ஹடாய் நகரில் கட்டிட இடிபாடுகளை அகற்றிய போது குழந்தையின் அழுகுரல் கேட்டுள்ளது. இதனை தொடர்ந்து உடனே மீட்புக்குழுவினர் இடிபாடுகளை வேகமாக அகற்றி குழந்தையை உயிருடன் மீட்டுள்ளனர். 

மேலும் குழந்தை பல மணி நேரம் பசியுடன் இருந்தபோதிலும் உயிர் பிழைத்துள்ளதாகவும், தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் தற்போது நலமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடினமான முயற்சிகளுக்குப் பின்னர் குழந்தை உயிருடன் இருப்பதாக துருக்கிய சுகாதார அமைச்சர் காணொளியொன்றினை வெளியிட்டு மகிழ்ச்சி தெரிவித்துள்ளரார்.
புதியது பழையவை