புலிகளின் தலைவர் தொடர்பில் இராணுவம் நிராகரிப்பு!



2009ஆம் ஆண்டு மே 18ஆம் திகதி இடம்பெற்ற இறுதிக்கட்ட போரில் பிரபாகரன் உயிரிழந்து விட்டதாக இலங்கை இராணுவம் அறிவித்துள்ளது.

மேலும், இவர் உயிரிழந்தமைக்கான ஆதாரம் தம்வசம் உள்ளதாக இலங்கை இராணுவ ஊடகப்பேச்சாளர் பிரிகேடியர் ரவி ஹேரத் சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிருடன், நலமுடன் இருப்பதாக உலக தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் தெரிவித்திருந்தார். 

விடுதலைப் புலிகளின் தலைவர் தொடர்பில் இராணுவம் நிராகரிப்பு | Announcement That Prabhakaran Passed Away

இன்றைய தினம் இடம்பெற்ற (13.02.2023) செய்தியாளர் சந்திப்பில் வைத்து அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் நலமுடன், உயிருடன் உள்ளார். பிரபாகரன் நலமுடன் இருப்பது ஈழத்தமிழர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும்.


பிரபாகரன் குறித்து தவறான தகவல் பரப்பப்பட்டு விட்டது. அவருடன் தொடர்பில்தான் உள்ளோம். பிரபாகரனின் அனுமதியின் பேரிலேயே செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெறுகிறது பிரபாகரனின் மனைவி, மகளும் நலமுடன் உள்ளனர்.

உரிய நேரத்தில் மக்கள் முன் வருவார். பிரபாகரன் எங்கு உள்ளார் என்பது தற்போது அறிவிக்க இயலாது. தமிழக அரசும், மக்களும் பிரபாகரனுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்.

இலங்கையில் ராஜபக்சக்களின் ஆட்சி முடிவுக்கு வந்திருப்பதால் இந்த அறிவிப்பை வெளியிடுகிறோம் என குறிப்பிட்டுள்ளார்.


இதைத் தொடர்ந்து இலங்கை இராணுவம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
புதியது பழையவை