எரிபொருள் ஏற்றிச்சென்ற பவுசர் - 80 அடி பள்ளத்தில் விழுந்து விபத்து!நுவரெலியா – பதுளை வீதியில் ஹக்கல பகுதியில் இன்று (19) ஞாயிற்றுக்கிழமை அதிகாலை எரிபொருள் (சிபேட்கோ) பவுசர் விபத்துக்குள்ளானதில் அதன் சாரதியும் உதவியாளரும் காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

கொலன்னாவை எரிபொருள் களஞ்சியசாலையிலிருந்து – கெப்பட்டிபொல எரிபொருள் நிலையத்திற்கு டீசல் ஏற்றிச் சென்ற பவுசரே ஹக்கல பூங்கா பகுதியில் சுமார் 80 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகி உள்ளது.

சீரற்ற வானிலையால் சாரதியின் கட்டுப்பாட்டைமீறி வாகனம் விபத்துக்குள்ளாகியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.

குறித்த பவுசரில் 13,200 லீற்றர் டீசல் இருந்ததாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

இந்த விபத்தில் குறித்த கொள்கலன் பவுசர் கடுமையாக சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கின்றன .

இவ் விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை நுவரெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
புதியது பழையவை