அம்பாறையில் குளவிக் கொட்டுக்கு இலக்காகி சிறுவன் உயிரிழப்புஅம்பாறை - உகண பொலிஸ் பிரிவில் கோமாரிய பிரதேசத்தில் குளவி கொட்டுக்கு இலக்காகி சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

குறித்த பிரதேசத்தில் மரமொன்றில் காணப்பட்ட குளவிக் கூடு பருந்துகளால் கலைக்கப்பட்டுள்ளது.

இதன் போதே குறித்த சிறுவன் குளவிக் கொட்டுக்கு இலக்காகியுள்ளார்.

இதன் போது படுகாயமடைந்த சிறுவன் அம்பாறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்த சிறுவன் 12 வயதுடைய கோமாரிய, உஹண பிரதேசத்தை சேர்ந்தவராவார்.
புதியது பழையவை