மட்டக்களப்பு சந்தனமாடு ஆற்றில்போடப்பட்ட தற்காலிக தோணி போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது - பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள அவல நிலைசெங்கலடி செயலாளர் பிரிவுக்குட்பட்ட சித்தாண்டிலிருந்து ஈரளகுளம் செல்லும் பிரதான சந்தனமாடு ஆற்றில்போடப்பட்ட தற்காலிக தோணி போக்குவரத்து நிறுத்தப்பட்டு இருப்பதினால் பொதுமக்களின் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

குறித்த ஆற்றின் ஊடாக வேரம், இலுக்கு பொத்தானை, பெரியவட்டவான், ஈரக்குளம், குடும்பி மலை உள்ளிட்ட பல கிராமங்களுக்கு போக்குவரத்து செய்யப்படுகின்றது.நாளாந்தம் நூற்றுக் கணக்கான பொதுமக்கள் போக்குவரத்து செய்கின்றார்கள்.

ஆண்கள் மற்றும் பெண்கள் என இடுப்பு அளவு தண்ணீரில் அபாயத்தின் மத்தியில் போக்குவரத்து செய்வதை அவதானிக்க கூடியதாக இருந்தது.

குறித்த பகுதி ஊடாக விறகு எடுப்பவர்கள், பால் கொள்வனவாளர்கள், பொதுமக்கள் என பலரும் போக்குவரத்து செய்கின்றார்கள்.


தனியாருக்கு வழங்கப்பட்டிருக்கும் குறித்த தோணி போக்குவரத்து சேவையினை செங்கலடி பிரதேசசபை பொறுப்பேற்று பொதுமக்களின் சேவைகளை இலகுவானதாக மேற்கொள்ள வேண்டும் என குறித்த பகுதி மக்கள் தெரிவிக்கின்றார்கள்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் இரண்டு அமைச்சர்கள் இருந்தாலும் எங்களுடைய நிலையை கண்டு கொள்வதில்லை என பொதுமக்கள் தெரிவிக்கின்றார்கள்.

அத்துடன் நாங்கள் இந்த நிலையில் குடும்ப வயிற்றுப் பசிக்காக விறகு எடுக்கும் தொழிலை மேற்கொண்டு மிகவும் கஷ்டத்தில் மத்தியில் இவ்வாறு பயணம் செய்கின்றோம். ஆனால் இந்த காய்ந்த விறகை எடுக்கவரும் எங்களை வன இலாக அதிகாரிகள் அச்சுறுத்துகின்றார்கள்.

ஆனால் மாவட்டத்திலுள்ள இரண்டு ராஜாங்க அமைச்சர்கள்! உள்ளார்கள். அதில் ஒருவர் பிள்ளையான் அமைச்சர் புலுட்டுமானோடை பகுதியில் JCP கொண்டு காடுகளை அழிக்கின்றார்.

இந்த நாட்டில் அவர்க்கு ஒரு சட்டம் எங்களுக்கு ஒரு சட்டமா?. நாங்கள் படும் கஷ்டத்தை பாருங்கள் இந்தத் தண்ணீரில் நாங்கள் எங்கள் வயிற்று பிழைப்புக்காக விறகுகளை கொண்டு வந்து சேர்க்க வேண்டிய நிலைமை காணப்படுகிறது.

விரைவாக எங்களுக்கு ஒரு போக்குவரத்து செய்யக்கூடிய தோணியாவது ஏற்படுத்தித் தாருங்கள் என பொதுமக்கள் தெரிவிக்கின்றார்கள்.


புதியது பழையவை