மட்டக்களப்பு குருக்கள்மடம் - சவுக்குத் தோட்டத்தில் திடீரென தீப்பரவல்!மட்டக்களப்பு மாவட்டம் குருக்கள்மடம் கிராமத்தில் நேற்று(27.02.2023) கடற்கரைப் பகுதியை அண்மித்து காணப்படும் மயான வீதியில் அமைந்துள்ள சவுக்குத் தோட்டத்தில் திடீரென தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.

திடீரென தீப்பரவல்
திடீரென ஏற்பட்ட தீவிபத்துச் சம்பவத்தில் அப்பகுதியில் நின்ற சுமார் 30 இற்கும் மேற்பட்ட மரங்கள் எரிந்துள்ளதை அவதானிக்க முடிந்தது என எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

தீப்பரவல் சம்பவம் தொடர்பில் அறிந்த அப்பகுதி இளைஞர்கள், கிராம மக்கள், குருக்கள்மடம் இராணுவத்தினர், என பலரும் ஒன்றிணைந்து பலத்த பிரயத்தனத்துக்கு மத்தியில் மேலதிக சேதம் ஏற்படாத வண்ணம் தீயை கட்டுப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதியது பழையவை