அவுஸ்ரேலியாவில் - மட்டக்களப்பைச் சேர்ந்த இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு!அவுஸ்ரேலியாவில் வசித்துவரும் மட்டக்களப்பைச் சேர்ந்த இளம் குடும்பஸ்தர் பரிதாபககரமாக உயிரிழந்துள்ளார்.

இரண்டு பிள்ளைகளின் தந்தையான 39 வயதுடைய ஸ்ரீராஜ் சந்திரநாதன் என்பவரே உயிரிழந்தவராவார்.

இவர் தனது வீட்டில் வழுக்கி விழுந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று (27-02-2023) உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவரின் மறைவு குடும்பத்தவர்கள் மற்றும் நண்பர்களிடையே பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதியது பழையவை