சிறுவர் இல்ல பாதுகாப்பிலிருந்த சிறுமிகள் துஷ்பிரயோகம் - ஒருவர் கைது!இரத்தினபுரி - ரக்வான பகுதியில் உள்ள சிறுவர் இல்லத்தில் 11 சிறுமிகளை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரை மார்ச் 8 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ரக்வான பிரதேசத்தில் உள்ள சிறுவர் இல்லம் ஒன்றில் 11 சிறுமிகள் வன்புணர்விற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக இரத்தினபுரி சிறுவர் மற்றும் பெண்கள் பணியகம் முறைப்பாடு செய்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பிலான விசாரணைகளின் போது சந்தேகநபர் சிறுவர் இல்லத்தில் வைத்து பத்து சிறுமிகளை தொடர்ச்சியாக பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபர் பொலிஸாரால் கைது
அதேவேளை, சிறுவர் இல்லத்தில் தங்கியிருந்த சிறுமி ஒருவர் 18 வயதை எட்டியதில் இருந்து பாதுகாப்பாளரின் வீட்டில் தங்கியிருந்ததாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதன்போது கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள குறித்த சிறுமி கஹவத்தை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
புதியது பழையவை