ஆரம்பமாகியது ஐ.நா கூட்டத்தொடர்!



இலங்கை, எகிப்து, துர்க்மெனிஸ்தான், ஜாம்பியா, பேரு மற்றும் பனாமா உள்ளிட்ட 6 நாடுகள் தொடர்பான மீளாய்வு கூட்டத் தொடரே இன்று முதல், எதிர் வரும் மார்ச் 24ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.

இந்நிலையில், இலங்கை தொடர்பான மீளாய்வு கூட்டத் தொடர் மார்ச் 8 மற்றும் 9ஆம் திகதிகளில் 3 கட்டங்களாக இடம்பெறவுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மார்ச் 8ஆம் திகதி இலங்கை நேரப்படி முற்பகல் 10 மணி முதல் நண்பகல் 12 மணிவரை முதலாவது கூட்டத்தொடரும், அன்றைய தினம் மாலை 3 மணி முதல் 5 மணிவரை முதலாவது கூட்டத்தொடரின் இரண்டாம் கட்ட விவாதமும் இடம்பெறவுள்ளது.

அதனையடுத்து, மார்ச் 9ஆம் திகதி முற்பகல் 10 மணி முதல் நண்பகல் 12 மணி வரை இரண்டாவது கூட்டத்தொடர் இடம்பெறவுள்ளது. இதில், சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கையின் 173 உறுப்பினர்களில் ஆறு கட்சிகளும் உள்ளடங்குகின்றன.

இவை ஐ.நா.வுடன் ஏற்படுத்திக் கொண்டுள்ள உடன்படிக்கையை எவ்வாறு செயல்படுத்துகின்றன என்பது தொடர்பில் இந்தக் கூட்டத் தொடரில் ஆராயப்படும். அத்தோடு ஐ.நா. மனித உரிமைகள் குழுவின் முந்தைய பரிந்துரைகள் குறித்து 18 சுயாதீன சர்வதேச நிபுணர்கள் குழுவின் வழக்கமான மதிப்பாய்வுகளுக்கும் உட்படுத்தப்படவுள்ளது.

அந்தந்த நாடுகளின் அறிக்கைகள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களிடமிருந்து பிற சமர்ப்பிப்புகளைப் பெற்றுக் கொண்டுள்ள மனித உரிமைகள் குழு, பொது உரையாடல்களின் மூலம் ஆறு பிரதிநிதிகளுடன் பல பிரச்சினைகள் குறித்து விவாதிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை