இன்று நாட்டில் கன மழை பெய்யும் சாத்தியம்!நாட்டின் பல மாவட்டங்களில் இன்றைய தினம் மாலை அல்லது இரவு வேளையில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

குறித்த அறிவிப்பினை இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.

அந்தவகையில், சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவு வேளையில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யலாம் என அந்தத் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

அதேசமயம், களுத்துறை, காலி, மாத்தறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசும், மின்னல் தாக்கமும் ஏற்படும், இதனால் ஏற்படும் பாதிப்புக்களை குறைக்க முன்னெச்சரிக்கையுடன் செயல்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது.
புதியது பழையவை