புகையிரத்துடன் மோதுண்டு முதியவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழப்பு!யாழ் ராணி புகையிரத்துடன் மோதுண்டு முதியவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்து சம்பவம் கிளிநொச்சி பரந்தன் புகையிரத நிலையத்திற்கு அருகில் இன்று மாலை (24-02-2023) இடம்பெற்றுள்ளது.

குறித்த விபத்து கிளிநொச்சியில் இருந்து யாழ், நோக்கிச் சென்றுகொண்டிருந்த புகையிரத்துடன் பரந்தன் 1/4 ஏக்கர் திட்டம் உமையாள்புரம் பகுதியில் ஏற்பட்டுள்ளது.

இச் சம்பவத்தில் இராமலிங்கம் இராஜேஸ்வரன் வயது 74 என்பவரே உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் உடல் ஆனையிறவு புகையிரத நிலையத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்து தொடர்பாக மேலதிக விசாரணைக்கு கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
புதியது பழையவை