தமிழர் பகுதியில் திடீரென முளைத்த புத்தர் - பின்னணியில் இராணுவத்தினர்!யாழ்ப்பாணத்தில் திடீரென முளைத்த புத்தரினால் அந்தப்பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நிலாவரை கிணறு அமைந்துள்ள பகுதியில் அரச மரத்துக்கு கீழே புத்தர் சிலை இனங் காணப்பட்டுள்ளது.

இரவோடு இரவாக இனந்தெரியாதவர்களால் புத்தர் சிலை வைக்கப்பட்டிருக்கலாமென தெரியவருகிறது.


நிலாவரை பகுதியில் தொல்லியல் திணைக்களத்தினர் உரிமை கொண்டாடி வருகின்றனர்.


இந்நிலையில் நிலாவரை பகுதியை சுற்றி இராணுவத்தினர் கடமையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவ்வாறான நிலையில் குறித்த சிலை வைத்திருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


இதேவேளை ஊர் மக்களால் ஏற்பட்ட எதிர்ப்பு காரணமாகவும் வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தலையீட்டையும் அடுத்து குறித்த சிலை இராணுவத்தினரால் எடுத்து செல்லப்பட்டுள்ளது.
புதியது பழையவை