வடக்கில் இருந்து கிழக்கைநோக்கிய பேரணி - இதுவரை வெளிவராத இரகசியங்கள்!!வடக்கில் இருந்து கிழக்கைநோக்கி நான்கு நாட்களாக நடைபெற்ற பல்கலைக்கழக தமிழ் மாணவர்களின் பேரணி முழுவதிலும் பல விடயங்கள் நடைபெற்றன.

குறிப்பாக அந்தப் பேரணியைக் குழப்பும் விதமாகவும், பேரணியின் நோக்கத்தைக் களங்கப்படுத்தும் விதமாகவும் இடம்பெற்ற பல இரகசியச் சதிகள் பற்றி பல்கலைக்கழக மாணவர்கள் தெரிவித்த விடயங்களுள் சில:-

பேரணிக்கான ஏற்பாடுகள் அனைத்தும் நடைபெற்றுமுடிந்து பொறுப்புகள் பகிர்ந்தளிக்கப்பட்ட பின்னர் திடீரென்று கிழக்குப் பல்கலைக்கழ மாணவர்கள் சிலர் மிரட்டப்பட்டிருந்தார்கள். அவர்களுக்கு உயிரச்சுறுத்தலும் விடுக்கபட்டது. அதனைத்தொடர்ந்து அவர்கள் தமது தொலைபேசி அழைப்புக்களைத் துண்டித்துக்கொண்டு தலைமறைவாகிவிட்டார்கள்.


கிழக்குக்கான பேரணி ஏற்பாடுகளைப் பொறுப்பெடுத்திருந்த கிழக்குப் பல்கலைக்கழக மாணவன் ஒருவன் கடத்திச் செல்லப்பட்டு கடுமையாகத் தாக்கப்பட்டான். பலத்த காயங்களுடன் அவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டான்.

பேரணி ஏற்பாடுகள் முழுவதிலும் கலந்துகொண்டு, பேரணி முழுவதிலும் கோசமெழுப்பி வந்த ஒரு இளைஞன் ஒரு உளவாளி என்கின்ற விடயம் பேரணி முடிந்த பின்னர்தான் மாணவர்களுக்குத் தெரியவந்தது.

பேரணி ஏற்பாடுகள் முதல், யார் யார் முன்நின்றார்கள், யார் யார் தொடர்பில் இருந்தார்கள் என்பன உற்பட அனைத்து தகவல்களும் உரிய இடங்களுக்கு அந்த இளைஞனால் வழங்கப்பட்டிருக்கலாம் என்று கூறுகின்றார்கள் மாணவர்கள்.


பேரணியில் கலந்துகொண்ட - உளவாளி என்று சந்தேகிக்கப்பட்ட அந்த இளைஞனும், அவனது இரண்டு நன்பர்களும், தங்களுடன் சிறிலங்காவின் தேசியக் கொடியை மறைத்து எடுத்துவந்திருந்தார்கள். மட்டக்களப்பு பெவபர் மைதானத்தில் பிரகடனம் வாசிக்கப்பட்டுக்கொண்டிருந்த பொழுது சிங்கக்கொடியை தீவைத்து எரிப்பதற்கு முயற்சி செய்துள்ளார்கள். அதனை அறிந்த மாணவர்கள் அந்த இளைஞர்களை பிடித்திழுத்து அந்த செயலைத் தடுத்து நிறுத்தினார்கள்.

மாணவர்களின் பேரணியில் சிறிலங்காவின் தேசியக் கொடி எரிக்கப்பட்டதாகக் காண்பித்து மாணவர்களை கைதுசெய்து சிறையில் அடைப்பதும், மக்கள் எழுச்சிக்குக் களங்கம் ஏற்படுத்துவதுமே அவர்களது நோக்கமாக இருந்ததாக மாணவர்கள் தெரிவிக்கின்றார்கள்.

வடக்கில் இருந்து கிழக்கு நோக்கிய பேரணி என்ற தொணிப்பொருளில் அமைந்த அந்தப் பேரணிக்கு கிழக்கு மக்கள் எதிர்பு வெளியிடுகின்றார்கள் என்று உலகிற்குக் காண்பிக்க பல சதிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், மட்டக்களப்பில் சில இடங்களில் பேரணி மீது தாக்குதல் நடாத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்ததாகவும், தெரிவிக்கப்படுகின்றது.

குறிப்பாக கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு முன்னால் வைத்து பேரணி மீது தாக்குதல் நடாத்திவிட்டு, வடக்கு பல்கலைக்கழக மாணவர்களுக்கும் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களுக்கும் இடையில் மோதல் என்று உலகிற்குக் காண்பிக்க பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் மாணவர்கள் தெரிவிக்கின்றார்கள்.

வாழைச்சேனை புகையிரத நிலையத்திற்கு முன்பாக வைத்தும் சில முஸ்லிம் இளஞர்களை வைத்து பேரணிமீது தாக்குதல்கள் மேற்கொண்து தமிழ் முஸ்லிம் கலவரத்தை ஏற்படுத்தவும் திட்டமிடப்பட்டிருந்ததாகத் தெரியவருகின்றது.

அனைத்து சதிகளும் கிழக்குப் பலகலைக்கழக மாணவர்களால் முறியடிக்கப்பட்டதாக தெரிவிக்கின்றாரகள் ஏற்பாட்டாளர்கள்.புதியது பழையவை