இலங்கையை சேர்ந்த மற்றுமொரு கோடீஸ்வரர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்!இலங்கையின் ஒபெக்ஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளரும், பிரபலமான தொழிலதிபருமான ஒனேஷ் சுபசிங்க (45) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் இன்றையதினம் அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

தொழிலதிபர் ஒனேஷ் சுபசிங்க மற்றும் அவரது குடும்பத்தினர் ஜகார்த்தாவுக்கு சுற்றுலா சென்றுள்ளநிலையில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்திற்கான காரணம் வெளிவராத நிலையில் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஜகார்த்தாவின் காவல்துறையினர் மேற்கொண்டு வருவதாக கூறப்படுகின்றது.
புதியது பழையவை