கஜமுத்துக்களை விற்பனை செய்ய முயன்ற இளைஞன் கைது!



அம்பாறை கல்முனையில் கஜமுத்துக்களுடன் இளைஞரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கல்முனை புறநகர் பகுதியில் அமைந்துள்ள விடுதியில், கடந்த 03ம் திகதி இரவு சந்தேகத்திற்கிடமாக ஒருவர் நடமாடுவதாக இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு
கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து, முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே கஜமுத்துக்களை விற்பனை செய்ய முயன்ற 29 வயது மதிக்கத்தக்க,
இளைஞன் கைது விசேட அதிரடிப் படையினரால் செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்டவர் திருகோணமலை கந்தளாய் பகுதியை சேர்ந்தவர் என அடையாளங் காணப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட நபரையும் சான்றுப் பொருட்களையும் சம்மாந்துறை வன ஜீவராசிகள்திணைக்கள பிரிவிடம் விசேட அதிரப்படையினர் பாரப்படுத்தினர்.
புதியது பழையவை