தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் போராட்டம்



அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ள புதிய வரி அதிகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, தென்கிழக்குப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தினர் கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.

இந்த போராட்டம் தென்கிழக்குப் பல்கலைக்கழக முன்பாக நேற்று (01.02.2023) இடம்பெற்றுள்ளது.

இதன்போது அநீதியான வரி விதிப்பை நிறுத்து, அரசாங்கத்தின் ஊழலால் விழுந்தவர்களை வரி ஏறி மிதிக்கின்றது, பணத்தை எடுத்தவரிடம் கேட்பதே நீதி, எங்களிடம் கேட்பது அநீதி போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியாவாறு விரிவுரையாளர்கள் அமைதியான முறையில் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். 

புதிய வரி அதிகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்
போராட்டத்தில் ஈடுபட்ட விரிவுரையாளர்கள் அரசாங்கத்துக்கும், மக்களுக்கும் தங்களது நிலைப்பாடுகளை தெளிவுபடுத்தி கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.

இந்த போராட்டத்தில் தென்கிழக்கு பல்கலைகழகத்தின் ஆசிரியர் சங்க உயர்மட்ட உறுப்பினர்கள், பல்வேறு பீடங்களையும் சேர்ந்த பேராசிரியர்கள், சிரேஷ்ட மற்றும் கனிஷ்ட விரிவுரையாளர்கள் எனப் பலரும் கலந்த கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

புதியது பழையவை