தமிழர் பகுதியில் கால்நடையை சுட்டுக்கொன்ற பெரும்பான்மையினத்தவர்!



மட்டக்களப்பு – மயிலத்தமடு, மாதவனை பகுதியில் கால்நடை ஒன்றை பெரும்பான்மையினத்தவர் சுட்டுக்கொன்ற சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம் இன்று (25)காலை இடம்பெற்றுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்ட எல்லையில் உள்ள மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல் தரை காணிகளை அபகரித்து சிங்கள குடியேற்றம் ஒன்றை உருவாக்க முயற்சிகள் நடைபெற்று வருகிறது.

மட்டக்களப்பில் உள்ள தமிழ் பண்ணையாளர்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் நோக்குடன் பால் தரும் பசுக்களை திட்டமிட்ட வகையில் படுகொலை செய்யும் நடவடிக்கைகளும் நடந்தேறி வருகின்றன.


இதன் ஒரு கட்டமாக இன்றும் கால்நடை ஒன்று சுட்டுக்கொல்லப்பட்டுள்ளது.


காடுகள் அழிக்கப்பட்டு சிங்கள குடியேற்றங்களை மேற்கொண்டு வருகின்றனர்.
புதியது பழையவை