உலகம் எங்கும் பரந்து வாழும் அன்பான தமிழ் மக்களே
இன்று "வெள்ளையண்ணா "என்று அழைக்கப்படும் யாழ் வல்வெட்டித்துறை ரேவடியை பிறப்பிடமாகவும் குச்சத்தை வசிப்பிடமாகவும் கொண்ட சரவணமுத்து அழகேஸ்வரராசா இன்று இறைவனடி சேர்ந்தார்.
வெள்ளையண்ணா அவர்கள் இளம்வயதிலேயே படகுகளுக்கான வெளியினைப்பு இயந்திரங்களை திருத்தும் பட்டறையை உருவாக்கி இருந்தார்.
வல்வெட்டித்துறை நகரம் மிகவும் செல்வ செழிப்புடன் இருப்பதற்கு அடிநாதமாக விளங்கியவர்கள் திரைகடல் ஓடி திரவியம் தேடிய வணிகப் பெருமக்களே.
ஆபத்தான கடல் பயணங்கள் மேற்கொள்ளும் போது படகில் உள்ள வெளியினைப்பு இயந்திரங்கள் சரியாக வேலை செய்ய வேண்டும்.
ஒவ்வொரு கடல் பயணத்தின் போதும் அந்த படகின் வெளியினைப்பு இயந்திரங்களை சுத்தம் செய்து தரமாக சரியாக வேலை செய்து கொடுப்பதில் வெள்ளையண்ண௱அவர்கள் தலை சிறந்தவர்.
1970 இல் ஆயுத போராட்டம் ஆரம்பமான காலத்தில் இருந்து இவரின் பங்களிப்பும் தொடங்கியது.
தேசிய தலைவர் அவர்களுடன் ஆரம்பகாலம் முதல் மிகவும் நம்பிக்கைக்கு இலக்கணமாக விளக்கினார்.
விடுதலைப்போர் திவீரம் கொண்டது 1980 களில் அப்போது கடல் பயணங்கள் மிகவும் அபாயகரமான பயணமாக மாறியது.
விடுதலைப் புலிகளின் முதலாவது படகான
"பஞ்சவர்ணக்கிளி"
யை பராமரிப்பதில் அவர் மிகவும் கரிசனையுடன் இருப்பார்.
சமகாலத்தில் வடகிழக்கில் இருந்து பலர் இவரிடம் வந்து பயிற்சி பெற்ற வண்ணமே இருப்பார்கள்.
1983 இன் பிற்பகுதியில் விடுதலைப் புலிகளால் உருவாக்கப்பட்ட முதல் படகு கட்டுமானபணி பொலிகண்டி குடியேற்ற பகுதியில் செய்யப்பட்டது.
இதற்க்கு பொறுப்பாக இருந்த பூபதி அண்ணா மற்றும் ரமேஷ் அண்ணா, புவனி அண்ணாவுடன் இணைத்து மிகவும் சிரமப்பட்டு முதல் மூன்று அதிவேக விரைவுப் படகுகள் உருவாக்கப்பட்டது .
ஆரம்பகாலத்தில் குறைந்த (8hp,15hp,25hp) குதிரை வலு கொண்ட இயந்திரங்களே பாவனையில் இருந்தது.
இலங்கை கடற்படையின் தீவீர தாக்குதலில் இருந்து தப்புவதற்கு முதன் முதலாக மூன்று 25hp குதிரை வலு கொண்ட படகை உருவாக்குவதில் வெள்ளையண்ணா அவர்களின் பங்களிப்பு அளப்பரியது.
1983 இல் இருந்து 1987 வரை விடுதலைப்போர் வீறுநடை போட சம காலத்தில் கடலில் விடுதலைப் புலிகள் வீர வரலாறு படைத்தனர்.
அதே நேரம் விடுதலைப் புலிகளின் கடல் பயணங்களும் கூடுதலாக இருந்தது .அந்த நேரங்களில் இரவு பகல் பாராது மிகவும் கடுமையாக உழைத்தார்.
இதே காலப்பகுதியில்
வெள்ளையண்ணாவுடன் மிகவும் நெருக்கமாக பழகியவர்கள் நிறையவே இருக்கின்றார்கள்.
ஆரம்ப காலத்தில் மூத்த உறுப்பினர்களான
பண்டிதர், ரகு, குமரப்பா, சூசை, கந்தன் போன்றேரின் வழி நடத்தலில் ஈடுபட்டாலும் பிற்காலத்தில் அம்பப்பா அண்ணா, பாலப்பா அண்ணா, பெத்தையா அண்ணா, கோணேஸ் வீமன்,மில்லர்,ரம்போ சிவா,செல்லப்பா உட்பட மேலும் பலருடனும் மிகவும் நெருக்கமாக இருந்தார்.
இவரின் மறைவுச் செய்தியைக் கேள்விப்பட்டதும் என் விழித்திரையில் வெள்ளையண்ணாவின் garage ம் எமது போராளிகள் வலம் வந்த குச்சம் சந்தியும் நாம் வளர்த்த லலித் என்ற பன்றியும் என்றென்றும் அழியாத வரலாறாக நிலைத்து நிற்கும்.
1987 தொடக்கம் 1990 வரை இந்திய படையுடனான போர். விடுதலைப் போராட்ட வரலாற்றில் மிகவும் நெருக்கடிகளை சந்தித்த காலம். இந்திய ஆக்கிரமிப்பிக்குள் இருந்து கொண்டே பல கடற்பயணங்கள். பல ஆபத்துகளையும் கடந்து எமக்கான பேருதவிகளை செய்து இருந்தார்.
விடுதலைப் போராட்டத்துக்கு வெள்ளையண்ணா செய்த பங்களிப்பு என்பது மிகப்பெரிய வரலாற்றுப் பதிவு. இதனை எதிர் காலத்தில் ஆவணப்படுத்துவது அவசியமாகின்றது.
தேசிய தலைவரின் சிந்தனைக்கு செயல் வடிவம் கொடுத்த கடல் புலிகளின் சாதனைகளுக்கு வெள்ளையண்ணா
போன்றோரின் அயராத உழைப்பும் முக்கிய பங்காற்றியது என்றால் மிகையாகாது .
ஆயிரம் ஆயிரம் பேராளிகளை அன்பாக அரவணைக்த வெள்ளை மனம் கொண்ட வெள்ளையண்ணா தமிழீழ மக்கள் மனதில் என்றென்றும் மாமனிதராக வாழ்வார்...
வெள்ளையண்ணாவின் இழப்பானது அன்னாரின் குடும்ப த்தினருக்கும் தமிழீழ மக்களுக்கும் பேரிழப்பாகும்