தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருப்பதாக வெளியான தகவல் தொடர்பில் கருணா என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தமது கருத்தினை வெளியிட்டுள்ளார்.
விடுதலைப் புலிகளின் தலைவர் உயிருடன் இருப்பதாக பழ நெடுமாறன் ஊடகங்களுக்கு தெரிவித்த விடயம் தொடர்பாக கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
பெருமையாக யோசிக்க வேண்டிய விடயம்
மேலும் தெரிவிக்கையில், இரண்டு விடயங்கள் இருக்கின்றன, முதலாவதாக விடுதலைப் புலிகளின் தலைவர் களத்தில் மடிந்தது என்பது உண்மையான விடயம், அது பெருமையாக யோசிக்க வேண்டிய விடயம் என்பதே எனது கருத்து.
மற்றையது, விடுதலைப் புலிகளின் தலைவர் தொடர்பாக பிழையான வதந்திகளை பரப்பி உலக மக்களை முட்டாளாக்கும் செயற்பாடாக தான் பழ நெடுமாறன் ஊடகங்களுக்கு தெரிவித்த கருத்தை நான் பார்க்கின்றேன்.
ஆகவே இது முற்று முழுதான ஒரு தவறான விடயம் என குறிப்பிட்டுள்ளார்.