தபால் மூல வாக்களிப்பு உரிய திகதிகளில் இடம்பெறும்



தபால் மூல வாக்களிப்பு உரிய திகதிகளில் இடம்பெறும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.


தபால் மூலமானவாக்களிப்பிற்கான வாக்குச் சீட்டுகளை அச்சிடுவதற்குத் தேவையான நிதி கிடைக்காததால் தபால் மூலமான வாக்களிப்பு காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டது.

எதிர்வரும் 22, 23 மற்றும் 24 ஆகிய திகதிகளில் தபால் மூல வாக்கெடுப்பை நடத்த தேசிய தேர்தல் ஆணைக்குழு திட்டமிட்டிருந்தது.

இருப்பினும் குறித்த திகதிகளில் தபால் மூல வாக்களிப்புக்கான வாக்குச்சீட்டுகளை விநியோகிக்க முடியாது ஆணைக்குழு நேற்று அறிவித்திருந்தது.

இந்நிலையில் உள்ளூராட்சித் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு உரிய நேரத்தில் இடம்பெறும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
புதியது பழையவை