துருக்கியில் பாரிய நிலநடுக்கம்



துருக்கியின் வடகிழக்குப் பகுதியில் ஏற்பட்ட பாரிய நிலநடுக்கத்தால் 10 பேர் உயிரிழந்துள்ளதாக அமெரிக்காவின் புவி ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இன்று (06.02.2023) அதிகாலை ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 7.2 ஆக பதிவாகியுள்ளது.


கிழக்கு துருக்கியில் உள்ள காசியான்டேப் நகரில் பூமிக்கு அடியில் 11 மைல் தொலைவில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாகவும். சரியாக இன்று அதிகாலை 4.17 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.


நிலநடுக்கம் ஏற்பட்டதிலிருந்து சரியாக 15 நிமிடங்கள் இடைவெளியில் இன்னொரு சக்திவாய்ந்த நிலநடுக்கமும் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அது 6.7 ரிக்டர் என்றளவில் பதிவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிகாபூர்வ தகவல் இல்லை...
துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் தாக்கம் அருகிலிருக்கும் லெபனான், சைப்ரஸ், சிரியா நாடுகளிலும் உணரப்பட்டுள்ளது.

10 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இதுவரை அதிகாபூர்வ தகவல் ஏதும் துருக்கி அரசு வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை