அம்பாறையில் - வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலருணவுப் பொதிகள் வழங்கி வைப்பு!அம்பாறை மாவட்டத்தில் கடந்த 4 தினங்களாக தொடராக பெய்துவரும் அடைமழை காரணமாக அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்திற்குட்பட்ட பல பிரதேசங்கள்
வெள்ளத்தினால் மூழ்கியுள்ளது.

இதனால் ஒலுவில், பாலமுனை, திராய்க்கேணி போன்ற பிரதேசங்கள் வெள்ளத்தினால் மூழ்கியுள்ளதுடன், பல குடும்பங்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலமையை அவதானித்த OUROWN CHARITY நிறுவனத்தின் தவிசாளர் நஷாட் சம்சுடீன் அப்பிரதேசங்களுக்குச் சென்று பாதிக்கப்பட்ட குடும்பங்களின் வீடுகளை பார்வையிட்டத்துடன் அவர்களுக்குத் தேவையான உலருணவுப் பொதிகளை வீடு வீடாகச் சென்று இன, மத, மொழியின்றி அனைவருக்கும் வழங்கி வைத்தார்.புதியது பழையவை