தேர்தலின் பின்னர் அனைவரும் ஒன்றிணைவோம்!இனப்பிரச்சினை, நில விடுவிப்பு உள்ளிட்ட விவகாரங்களில் அழுத்தங்களை பிரயோகிக்க தமிழ் தேசியக் கூட்டமைப்பில் உள்ள அனைவரும் ஒன்றாகவே செயற்படுவோம் என மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.


கட்சியின் அரசியலமைப்பின்படி தமிழரசு கட்சியின் கீழ் தான், கூட்டமைபின் பிரதிநிதிகள் இருக்கின்றார்கள் என குறிப்பிட்டுள்ள மாவை சேனாதிராஜா, தேர்தலின் பின்னர் அனைவரும் ஒன்றிணைவோம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த தேர்தலில் கூட்டமைப்பாக இல்லாமல் தனித்தனியாக போட்டியிட்டு சிறு வாக்குகளால் விகிதாசாரத்தில் வந்து ஆட்சி அமைப்பதை தவிர்க்கும் வகையிலேயே தந்திரமாக போட்டியிடுகின்றோம் என்றும் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் இடம்பெற்ற வேட்பாளர் அறிமுக நிகழ்வில் உரையாற்றிய மாவை சேனாதிராஜா, தேர்தலிற்காக நிதி ஒதுக்கப்பட்ட போதும் அதனை விடுவிக்காமல் இருப்பது குறித்து கடும் கரிசனையும் வெளியிட்டுள்ளார்.
புதியது பழையவை