எதிர் கட்சி தலைவர் - வெளியிட்ட விசேட அறிக்கைதற்போதைய நிலவரப்படி தேசத்துரோக மக்கள் ஆணை இல்லாத தற்போதைய அரசாங்கம் வரலாற்று சிறப்பு மிக்க புனித ஸ்தலங்களிலிருந்து 24 மணி நேரத்திற்குள் ஆயுதப் படைகள், பொலிஸ்படைகள் மற்றும் சிவில் பாதுகாப்புப் படைகளை மீள அழைக்க முடிவு செய்துள்ளது.

நாட்டின் மேன்மை மிக்க அரசியலமைப்பினால் கூட உறுதிப்படுத்தப்பட்டுள்ள பௌத்த சாசனத்தைப் பாதுகாத்தல், ஊக்குவித்தல் மற்றும் பாதுகாக்கும் பொறுப்பைக் கூட தற்போதைய ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் மீறியுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ நேற்று (03) விசேட அறிக்கையொன்றின் மூலம் தெரிவித்துள்ளார்.


இந்த புனித ஸ்தலத்திற்கு அளிக்கப்பட்ட பாதுகாப்பை நீக்கியது குண்டர் தனமான செயல் என அழைக்கலாம் எனவும், பாதுகாப்பை நீக்குவதன் மூலம் வரலாற்றுப் பெறுமதி மிக்க தொல்பொருட்கள் திருடர்களுக்கு திறந்து விடப்படும் என்பதே இதன் அர்த்தம் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.
புதியது பழையவை