மட்டக்களப்பில் ஆரம்பமான கரிநாள் பேரணி


இலங்கை 75 வது சுதந்திர தினத்தை தமிழர் பிரதேசங்களில் கரி நாளாக கடைப்பிடித்து போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.

அரசியல் கட்சிகள், பொது அமைப்புகள், பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினரின் ஏற்பாட்டில் குறித்த கரிநாள் பேரணிகள் இடம்பெற்று வருகின்றன.

இந்நிலையில் மட்டக்களப்பில் தந்தை செல்வாவின் உருவச்சிலைக்கு மலர் மாலை அணிவித்து கரிநாள் பேரணி ஆரம்பமானது.

குறித்த பேரணியில் தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சுமந்திரன் , மற்றும் சாணக்கியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.

இந்நிலையில் குறித்த பேரணி மட்டகளப்பு கல்லடி பாலம் நோக்கி சென்று கொண்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
புதியது பழையவை