உள்ளூராட்சி மன்றங்களை கலைத்து சுயாதீனமாக தேர்தலை நடத்துவதற்கான வசதிகளை ஏற்படுத்துமாறு உள்ளூராட்சி ஆணையாளர்கள், தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தேர்தல் ஆணைக்குழுவின் அதிகாரிகள் அரச அதிகாரிகளை அழைத்து கலந்துரையாடிய போதே இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
உள்ளூராட்சி மன்றங்கள் கலைக்கப்படாத நிலையில், அதன் சொத்துக்கள் சட்டவிரோதமாக பயன்படுத்தப்படுவதை தடுப்பதற்காக சிக்கல்களை எதிர்நோக்க வேண்டியேற்படுமென உள்ளூராட்சி ஆணையாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்