இசைப்பிரியா, கிரிஷாந்தி பற்றி ஏன் தமிழரசுக்கட்சி வாய்திறப்பதில்லை?மட்டக்களப்பு மாநகரசபையில் அன்மையில் பாரிய களோபரம் ஏற்பட்டு, கிட்டத்தட்டை கைகலப்புவரைக்கும் சென்றிருந்தது அனைவரும் அறிந்த விடயம்.

என்ன நடந்தது என்று விசாரித்தோம்…

மட்டக்களப்பு மாநகரசபையின் மேயர் தமிழரசுக்கட்சி. பிரதி மேயர் டெலோ. ஓன்றாக இருந்த தரப்புக்கள் பிரிந்ததால் ஏற்பட்ட பிரச்சனை ஒரு காரணம்.

மட்டக்களப்பு மாநகரசபை அமர்வு 09.02.2023 அன்று மேயர் சரவணபவான் தலைமையில் இடம்பெற்றுது.

நிதி ஒதுக்கீட்டு சட்டமூலம் தொடர்பான வாதப்பிரதிவாதம் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது, ரெலோ அமைப்பைச்சேர்ந்த பிரதிமேஜர் சத்தியசீலன் கடுப்பாகி வாக்குவாதம் செய்து ரெலோ மற்றும் பிள்ளையான் அணி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தார்கள்- இது செய்தியில் வந்தது.

செய்தியில் வராத சம்பவம் ஒன்று உள்ளது.

அரசடி வட்டாரத்தை பிரதிநித்துவப்படுத்தும் தமிழரசுகட்சி உறுப்பினர் சிவம் பாக்கியம் அங்கு உரையாற்றும்போது தமிழரசுகட்சியின் வரலாறுகளை கூறி பாரம்பரியமாக ஜனநாயக ரீதியாக இனவிடுதலைக்காக போராடும் கட்சி என புகழ்ந்து பேசிக்கொண்டிருந்தார்.

அப்பொழுது குறுக்கிட்ட ரெலோகட்சி பிரதி முதல்வர் சத்தியசீலன் ஜனநாயகத்தை பற்றி வாய்கிழியக் கதைக்கும் நீங்கள் கடந்த பெப்ரவரி 4இல் கல்லடிப்பாலத்தில் இடம்பெற்ற தமிழரசுக்கட்சி கறுப்பு பெப்ரவரி நாளில் ஆரையம்பதி விஜி என்ற பெண்ணை படுகொலை செய்தமைக்கு மட்டும் நீதி கேட்டு போராடியது சரியா?


இலங்கை சுதந்திரம் அடைந்த 75 வருடங்களில் ஆரையம்பதி விஜி மட்டுமா படுகொலை செய்யப்பட்டார்?


இலட்சக்கணக்கான பெண்கள் - குறிப்பாக அம்பாறை கோணேஷ்வரி, முள்ளிவாய்காலில் இசைப்பிரியா, யாழ்ப்பாணத்தில் கிரிஷாந்தி இவர்களை பற்றி ஏன் உங்கள் தமிழரசு கட்சி வாய்திறக்கவில்லை?? இதுதானா உங்கள் ஜனநாயகம்??” என கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதில் கொடுக்க முடியாமல் மேயர் சரவணபவான், உறுப்பினர் சிவம் பாக்கியம் உட்பட தமிழரசுக்கட்சி உறுப்பினர்கள் பேசாமடந்தைகளாக இருந்ததாக அங்கிருந்தவர்கள் தெரிவித்தார்கள்.

கூட்டத்தில் பேசாமடந்தையாக இருந்தவர்கள் பிறகு ஊடகவியலாளர்களிடம் இரகசியமாகக் குறுகுசுத்த விடயம் இதுதான்:


“சாணக்கியனின் நிகழ்ச்சி நிரலில்தான் விஜி விடயம் நடந்தது. களுவாஞ்சிகுடி உறுப்பினர் வினோ என்பவரைத் திருப்திப்படுத்தவே ஆரையம்பதி விஜி வியத்தை அவர் கைகளில் எடுத்திருந்தார். 

அடுத்தது ஜனாவை பழிவாங்கவும் அந்த கரிநாள் பொது நிகழ்வை அவர் பயன்படுத்திக்கொண்டார். அந்தப் பொடியன் செய்கிற அரசியல் எங்களை எங்க கொண்டுபோய் விடுமோ தெரியவில்லை..
புதியது பழையவை