சமஷ்டிக்கு எதிராக துணைபோகும் தமிழரசு கட்சி - ஸ்ரீகாந்தா பகிரங்கம்!சமஷ்டிக்கு எதிரான விடயத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சியும் முன்னிலை வகிப்பதாக தமிழ்த் தேசியக் கட்சியின் தலைவரும் சட்டத்தரணியுமான என்.ஸ்ரீகாந்தா தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில்  இடம்பெற்ற ஊடகசந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் பல்வேறு இன மக்கள் வாழுகின்ற நாடு என்ற ரீதியில் இலங்கையில் சமஷ்டியாட்சி நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை ஒருமித்து வலியுறுத்த வேண்டிய சூழலில், அதற்கு எதிராக சில தமிழ்க் கட்சிகளும் செயற்பட்டு வருவதாகவும் சுட்டிக்காட்டினார்.
புதியது பழையவை