இந்துக்களின் புனித விரதங்களில் ஒன்றான மஹா சிவராத்திரி விரதம் இன்று கடைப்பிடிக்கப்படுகின்றது.
மஹா சிவராத்திரியை முன்னிட்டு இன்று அதிகாலை முதல் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஆலயங்களில் விசேட பூஜைகள் மற்றும் அபிடேகங்கள் இடம்பெற்று வருகின்றன.
மஹா சிவராத்திரியை முன்னிட்டு கிழக்கிலங்கையின் வரலாற்றுச் சிறப்புமிக்க மட்டக்களப்பு அமிர்தகளி ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் மந்திர கல்ப்ப யாகம் இடம்பெற்ற நிலையில், யாகத்தின் இறுதி நாளான
இன்றைய தினம் அதிகாலை வேளை விசேட பூஜைகள் மற்றும் மஹா யாகம் என்பன நடைபெற்றன.
ஆலயத்தின் பிரதமகுரு சிவஸ்ரீ ஆதிசௌந்தரராஜ குருக்களின் தலைமையிலான சிவாச்சாரியர்களினால் 108க்கும் மேற்பட்ட மூலிகைகள் கொண்டு
மந்திரகல்ப்ப மஹா யாகம் நடாத்தப்பட்டது.
மூலமூர்த்தியாகிய மாமாங்கேஸ்வரருக்கு விசேட அபிசேக ஆராதனை நடைபெற்றதை தொடர்ந்து கும்பம் ஊர்வலமாக கொண்டுவரப்பட்டு அபிசேகம் செய்யப்பட்டது.