முப்பதாவது தடவையாக நாடாளுமன்றத்திற்கு செல்லும் ஜனாதிபதி!



ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாகப் பதவியேற்றதன் பின்னர் இன்று (08.02.2023) 30ஆவது தடவையாக நாடாளுமன்றம் செல்கின்றார்.

இதுவரை பதவியில் இருந்த ஜனாதிபதிகள் அதிகமாக நாடாளுமன்றம் செல்வதில்லை.


நாடாளுமன்றத்தை ஒத்திப்போடுவதற்கு அல்லது கொள்கை விளக்க உரையை நிகழ்த்துவதற்கே செல்வார்கள்.

30ஆவது தடவையாக நாடாளுமன்றம் செல்லும் ரணில்
இதற்கமைய ரணில் விக்ரமசிங்க கடந்த வருடம் ஜூலை 20 முதல் இந்த வருடம் ஜனவரி 18 வரை 29 தடவைகள் நாடாளுமன்றம் சென்றுள்ளார்.

இந்நிலையில், 30 ஆவது தடவையாக இன்று (08.02.2023) சபைக்குச் செல்லும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் 4 ஆவது கூட்டத் தொடரை ஆரம்பித்து வைக்கவுள்ளார்.


அதேவேளை, ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரையும் இன்று (08.02.2023) இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை