உயிருக்கு போராடும் யானை!



திருகோணமலை, சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் காட்டு யானை ஒன்று கட்டுத் துவக்கினால் சுடப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவம் நேற்று (23) இரவு அல்லது இன்று (24) அதிகாலை இடம்பெற்றிருக்கலாமெல தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவத்தில் காயமடைந்த யானை கவன்திஸ்புர கிராம சேவகர் பிரிவில் உள்ள வயற்காணி ஒன்றில் உயிரோடு இருகின்றது.

இந்நிலையில் சம்பவ இடத்திற்கு தற்போது வருகைதந்த வன ஜீவராசிகள் திணைக்கள உத்தியோகத்தர்கள் காயம்பட்ட யானைக்கு சிகிட்சையளித்து வருவதாக கூறப்படுகின்றது.
புதியது பழையவை