மட்டக்களப்பு - மண்டூர் 13 ஆம் கிராமம் சங்கபுரம் விளாவட்டவான் அருள் மிகு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய கும்பாபிஷேகம்


கிழக்கிலங்கையின் மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று மண்டூர் 13 ஆம் கிராமம் சங்கபுரம் விளாவட்டவான் அருள் மிகு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய புனராவர்த்தன பஞ்ச குண்ட அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேகம்.

இன்று (22-03-2023) ஆம் திகதி சிவலிகப் பெருமானின் சிலை ஊர்வலமாக கொன்டுவரப்பட்டு ஆலயத்தில் கிரியாரம்பம் இடம்பெற்றனர்.

(23-03-2023)ஆம் திகதி எண்ணைக்காப்பும் (24-03-2023 ) வெள்ளிக்கிழமை கும்பாபிஷேகம் இடம் பெறும்

(05-04-2023) பாற்குடப்பவணியும் சங்காபிஷேகம் இடம் பெறும்

ஈழமணி திருநாட்டில் சகல வளங்களையும் தன்னகத்தே கொண்ட நீர் நிலம் மலை நெல் வனம் செழிக்கும் சிவ வைஷ்னவ
வழிபாட்டில் சிறந்து விளங்கும் மீன் பாடும் தென்நாடாம் கடல் சூழ் ஈழவள நாட்டின் கிழக்கு மாகாணத்தின் மட்டுமா நகரின் தெற்கு திசையில் வழிபாட்டுத் தலங்கள் பலவற்றைப தன்னகம் தாங்கி வளமுடன் திகழும் 13-ம் கிராமம் சங்கபுரம் விழாவட்டவான் பதியில் வர முதல்வனாயய் வாழ்வின் ஆதார புருஷனாய் வீற்றிருந்து திருவருள் பாலித்துக் கொண்டிருக்கும் அருள்மிகு ஸ்ரீ சித்தி விநாயகர் பெருமானுக்கு புனராவர்த்தன பஞ்சகுண்ட அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் திகழும் மங்களகரமான சுபகிருது வருடம் பங்குனி திங்கள் 10 நாள்(24-03-2023) வெள்ளிக்கிழமை வளர்பிறை கிருதியை திதியும் அஷ்வினி நட்சத்திரமும் அமிர்த சித்த யோகமும் கூடிய காலை 9.19 மணிமுதல் -10.41 மணி வரையும் இடப லக்கின சுப மூகூர்த்த வேலையில் சித்தி விநாயகப் பெருமான்,தம்பபிள்ளையார்,மூசிகம்,பலிபீடம்,சிவன்,நாகதம்பிரான்,முருகன்,நவக்கிரகம்,ஆஞ்சநேயர்,வைரவர் சுவாமிகளுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெறும்

அதனைத் தொடர்ந்து 12 நாட்கள் மண்டலாபிஷேக பூஜை தொடர்ந்து இடம் பெறும் (05 -04 -2023)ஆம் திகதி 13ஆம் கிராமம் கண்ணகி அம்மன் ஆலயத்தில் இருந்து பாற்குடப்பவணி எடுத்துவரப்பட்டு சங்காபிஷேகம் இடம் பெறும் பக்த அடியார்கள் ஆலயத்துக்கு வருகை தந்து விநாயக பெருமானின் திருவருளை பெற்று செல்லுமாறு அறியத் தருகின்றோம்.








புதியது பழையவை