தாயக விடுதலைப் போராட்டத்திற்கு 3 பிள்ளைகளை வித்திட்ட தாயார் உயிரிழப்பு!தாயக விடுதலைப் போராட்டத்திற்கு தனது மூன்று பிள்ளைகளை வித்திட்ட தாய் ஒருவர் சுகயீனம் காரணமாக உயிரிழந்துள்ளார்.

முல்லைத்தீவு - விசுவமடுவைச் சேர்ந்த ஆறுமுகம் லட்சுமி என்பவரே தனது 84 வயதில் நேற்று(25) உயிரிழந்தார்.

முதுமை மற்றும் நோய் காரணமாக சிகிச்சை பெற்று வீடு திரும்பிய அவர் உயிரிழந்துள்ளார்.

தாயக விடுதலைப் போராட்டத்தில் வீர காவியமான கப்டன் மாலிகா, வீரவேங்கை மாவரசி, வீரவேங்கை செங்கதிர் ஆகியோரின் தாயார் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை