கொழும்பில் துப்பாக்கிசூடு!



ஹோமாகம மபுல்கொட பிரதேசத்தில் நேற்று (25) இரவு கராஜ் ஒன்றின் முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்து மற்றும் முச்சக்கர வண்டி மீது ரி 56 ரக துப்பாக்கியால் துப்பாக்கிசூடு நடத்தப்பட்டுள்ளதாக ஹோமாகம காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

மோட்டார் சைக்கிளில் வந்த இருவரே துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளனர். துப்பாக்கிச்சூட்டில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை, இரண்டு வாகனங்களும் சேதமடைந்தன.

துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதற்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை. ஹோமாகம காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
புதியது பழையவை