வருமானம் குறைந்த குடும்பங்களுக்கு அரிசி வழங்கும் வேலைத் திட்டத்தின் கீழ், மட்டக்களப்பு மண்முனைப் பற்று பிரதேச செயலகப் பிரிவில் 9ஆயிரத்து 300 குடும்பங்களுக்கு, தலா 10 கிலோ வீதம் இரண்டு மாதங்களுக்கு அரிசி வழங்கப்படவுள்ளது.
அரிசி வழங்கும் வேலைத்திட்டம் முதற்கட்டமாக இன்று கிரான்குளம் பிரதேசத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
மண்முனைப் பற்று பிரதேச செயலாளர் சத்தியானந்தி நமசிவாயம் தலைமையில் அரிசி வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் எஸ்.புவனேந்திரன மண்முனைப் பற்று பிரதேச செயலக பிரதி திட்டமிடல் பணிப்பாளர் திருமதி ஜெயச்சந்திரன்,சமுர்த்தி வலய முகாமையாளர் சம்சுதீன் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.