குறைந்தவருமானம் பெறும் மக்களுக்காக அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் இலவச அரிசி வழங்கும் தேசிய நலன்புரி வேலைத்திட்டம் இன்று (26-03-2023) அம்பாறை ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவில் ஆரம்பித்துவைக்கப்பட்டது.
ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவின் அலிக்கம்பை கிராமத்தில் இத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு சம்பிரதாயபூர்வமான முறையில் இன்று இடம்பெற்றதுடன் 341 குடும்பங்களுக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டது.
ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.பபாகரனின் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் அலிக்கம்பை சென்சபேரியர் தேவாலய பங்குத்தந்தை மில்பர் மற்றும் பிரதேச செயலக திட்டமிடல் பணிப்பாளர் ஹுசைன்டீன் தலைமையக சமுர்த்தி முகாமையாளர் கிருபாகரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
மாதமொன்றிற்கு ஒரு குடும்பத்திற்கு தலா 10 கிலோ அரிசி வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.