காவல்துறை உத்தியோகத்தர் ஹெரோயினுடன் கைது!405 மில்லிகிராம் ஹெரோயினுடன் காவல்துறை கான்ஸ்டபிள் ஒருவர்  28ஆம் திகதி அனுராதபுரம் நகர தனியார் வங்கிக்கு அருகில் அநுராதபுரம் பிரிவு விஷ போதைப்பொருள் தடுப்பு பிரிவின் காவல்துறை குழுவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இரத்தினபுரி காவல்துறை பிரிவுக்குட்பட்ட காவல் நிலையமொன்றில் கடமையாற்றியவர் எனவும் நீதிபதி ஒருவரின் வீட்டின் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்டுள்ளதாகவும் பிரதேசத்தின் சிரேஷ்ட காவ்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

தாம் கடமையாற்றும் காவல் நிலையத்தில் அனுமதியின்றி பெமதுவ பிரதேசத்தில் உள்ள தனது வீட்டிற்கு அவர் வந்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

சந்தேகநபர் தொடர்பான மேலதிக விசாரணைகளை அனுராதபுரம் பிரதேச போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் காவல்துறை அதிகாரிகள் குழு மேற்கொண்டு வருகின்றது.
புதியது பழையவை