இலங்கையில் எரிபொருட்களின் விலைகள் சற்றுமுன் குறைப்பு!இலங்கையில் எரிபொருட்களின் விலைகள் சற்றுமுன் குறைக்கப்பட்டுள்ளன.

இன்று (29-01-2023)நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த விலை குறைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த விடயத்தை விசேட செய்தியாளர் சந்திப்பில் வைத்து எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர அறிவித்துள்ளார்.

92 ஒக்டேன் பெட்ரோலின் விலை 60 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 340 ரூபாவாகும்.

அத்துடன் 95 ஒக்டேன் பெட்ரோலின் விலை 135 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 375 ரூபாவாகும்.


மேலும் சுப்பர் டீசலின் விலை 45 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 465 ரூபாவாகும்.

ஒட்டோ டீசலின் விலை 80 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 325 ரூபாவாகும்.

இதேவேளை மண்ணெண்ணை விலை 10 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 295 ரூபாவாகும்.
புதியது பழையவை