நாட்டில் விவசாயிகளுக்கு இன்று முதல் இலவச எரிபொருள்!நாட்டில் விவசாயிகளுக்கு இன்று முதல் இலவச எரிபொருளை டோக்கன்கள் மூலம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கான நடவடிக்கையை விவசாய அபிவிருத்தி திணைக்களம் முன்னெடுத்துள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கையில் நெல் பயிரிடும் விவசாயிகளுக்கு பயிர்ச் செய்கைக்கு பயன்படுத்துவதற்காக சீன அரசாங்கம் 6.98 மில்லியன் லீட்டர் டீசலை இலவசமாக வழங்கியிருந்தது.


இன்று முதல் டோக்கன் மூலம் எரிபொருள்
இந்த நிலையில் விவசாய அபிவிருத்தி திணைக்களத்தினால் நாட்டின் பல மாவட்டங்களுக்கு உரிய டோக்கன்கள் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளன.

இதேவேளை இன்று கொழும்பு உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களுக்கு எரிபொருள் டோக்கன்கள் அனுப்பி வைக்கப்பட உள்ளதாக தெரியவருகிறது. 

எனவே இன்று முதல் அனைத்து விவசாயிகளும், குறித்த டோக்கன்கள் மூலம் நியமிக்கப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருளை பெற்றுக் கொள்ள முடியும் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை