மட்டக்களப்பு புகையிரதத்தில் உள்ள உணவு விடுதியில் - கரப்பான்,எறும்புகளுடன் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த உணவுகள்!



மட்டக்களப்பிலிருந்து கொழும்பு செல்லும் புகையிரதத்தில் உள்ள உணவு விடுதிக்கு எதிராக பொதுச்சுகாதார பரிசோதகர்களினால் சட்ட நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளது.


நேற்று மாலை மட்டக்களப்பிலிருந்து கொழும்பு நோக்கிச்செல்ல மட்டக்களப்பு புகையிரத நிலையத்தில் தரித்துநின்ற புகையிரதத்தில் உள்ள உணவு விடுதி பொதுச்சுகாதார பிரிவினரால் திடீர் சோதனையிடப்பட்டது.

இதன்போது அங்கு மனித பாவனைக்கு உதவாத வகையில் கரப்பான்,எறும்புகளுடன் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த உணவுகள் கைப்பற்றப்பட்டன.

அத்துடன் குறித்த உணவகத்தினை நடாத்தியவருக்கு எதிராக நாளைய தினம் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாக பொதுச்சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர்.

கோட்டைமுனைப்பிரதேச பொதுச்சுகாதார பரிசோதகர் மிதுன்ராஜ் தலைமையில் பொதுச்சுகாதார பரிசோதகர்களான கிஷான்,அமிர்தாப் ஆகியோர் இந்த சோதனை நடவடிக்கையினை மேற்கொண்டனர்.

மட்டக்களப்பிலிருந்து கொழும்பு நோக்கிச்செல்லும் புகையிரதத்தில் காணப்படும் உணவு விடுதிகுறித்து பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை