அக்கரைப்பற்று பிரதான வீதியில் கார் விபத்து!



அம்பாறை அக்கரைப்பற்று பொத்துவில் பிரதான வீதியில், அக்கரைப்பற்று 241 ஆம் இராணுவ படைப்பிரிவின் முகாமிற்கு முன்பாக இன்று (05)அதிகாலை நேரம் கார் ஒன்று
விபத்துக்குள்ளாகியுள்ளது.


கார் வீதியை விட்டு விலகி வீதிக்கு அருகில் இருந்த பாதுகாப்புத் தூண்களை உடைத்துக்கொண்டு அருகில் இருந்த சிறிய பள்ளமான பிரதேசமொன்றில் தலைகீழாக வீழ்ந்து கிடப்பதை அவதானிக்க முடிகிறது.


காரின் இருபக்க இலக்கத்தகடுகளும் காணப்படாத நிலையில் காரின் முன்பகுதி மோசமான நிலையில் ;சேதமடைந்துள்ளது.காரில் பயணம் செய்தவர்கள் தொடர்பிலான மேலதிக தகவல்கள் கிடைக்கப் பெறாத நிலையில் அக்கரைப்பற்று போக்குவரத்து பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
புதியது பழையவை