பாடசாலை மாணவி ஒருவரை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக அதிபர் கைது!பலாங்கொட பகுதியில் 11 வயது சிறுமியிடம் தகாத முறையில் நடந்து கொண்ட பாடசாலை அதிபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பலாங்கொட பின்னவல பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அதிபர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு

பாடசாலை மாணவி ஒருவரை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக அதிபர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிறுமி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


பலங்கொட எல்ராவ என்னும் பகுதியைச் சேர்ந்த 50 வயதான பாடசாலை அதிபரே இவ்வாறு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.


சந்தேக நபர் இன்றைய தினம் பலாங்கொடை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
புதியது பழையவை