புகை பரிசோதனை செய்யும் வாகனம் -அதிகளவான புகை வெளியேற்றுகின்றது!நுவரெலியா மாவட்டத்தின் முக்கிய நகரங்களுக்கு வாகனங்களின் புகையை பரிசோதிப்பதற்காக தினமும் பயணிக்கும் தனியார் நிறுவனமொன்றுக்கு சொந்தமான வாகனத்தில் இருந்து அதிகளவான புகை வெளியேறுவதை கைத்தொலைபேசியில் பதிவு செய்திருந்தனர்.

நுவரெலியாவிலிருந்து பொகவந்தலாவை நோக்கி (09) பயணித்த சிறிய ரக பாரவூர்தியானது அதிகளவான கறுப்பு புகையை வெளியிடுவதை வாகனத்தின் பின்னால் வந்த மோட்டார் சைக்கிளில் வந்த நபர் ஒருவர் தனது கையடக்கத் தொலைபேசியில் பதிவு செய்துள்ளார்.

புகை சோதனை செய்யும் அந்த நடமாடும் வாகனத்தில் வரும் அதிகாரிகள் அந்த வாகனத்தில் நுவரெலியா மாவட்டத்தின் முக்கிய நகரங்களுக்கு தினமும் சென்று புகை சான்றிதழ் வழங்குவதாக கூறப்படுகிறது.
புதியது பழையவை