வனவிலங்கு வைத்தியர் ஒருவர் சிறுத்தையின் தாக்குதலுக்கு இலக்காகி வைத்தியசாலையில்திஸ்ஸமஹாராம ரன்மினிதென்ன வனப்பகுதியில், வலையில் சிக்கிய சிறுத்தையை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த வனவிலங்கு வைத்தியர் ஒருவர் சிறுத்தையின் தாக்குதலுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

யால பூங்காவுக்கு அருகில் சிறுத்தை ஒன்று பொறியில் சிக்கியுள்ளதாக வனவிலங்கு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கு அமைய, ஊவா மாகாண வனவிலங்கு அதிகாரி கலாநிதி டபிள்யூ.தர்மகீர்த்தி தலைமையிலான குழுவினர் இன்று காலை ரொட்டவௌ பகுதிக்கு சென்று சிறுத்தையை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதன்போது சிறுத்தை வலையை உடைத்துக்கொண்டு வந்து வனவிலங்கு வைத்தியரை தாக்கியுள்ளதாக தெரியவருகின்றது.

இந்தச் சம்பவத்தில் காயமடைந்த வைத்தியர் மாலக அபேவர்தன சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றார்.
புதியது பழையவை