உள்ளுராட்சி தேர்தல் தினத்தை முடிவு செய்ய - தேர்தல் ஆணையத்தில் முக்கிய கலந்துரையாடல்கள் !உள்ளுராட்சி மன்றத் தேர்தல் திகதி அறிவிக்கப்படுவது தொடர்பான விசேட கலந்துரையாடல் இன்று (07) தேர்தல்கள் ஆணைக்குழுவில் நடைபெறவுள்ளது.

இன்று காலை 10.30 மணியளவில் இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இது தொடர்பான கலந்துரையாடலுக்காக நிதி அமைச்சின் செயலாளர், அரசாங்க அச்சக அதிகாரிகள் மற்றும் பொலிஸ் மா அதிபர் ஆகியோர் தேர்தல் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவது தொடர்பாக தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்கள் இன்று கூடி கலந்துரையாடவுள்ளனர்.

இதேவேளை, உள்ளுராட்சி சபைத் தேர்தல் திகதியை அறிவிப்பது தொடர்பில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் குழுவொன்று இன்று தேர்தல்கள் ஆணைக்குழுவைச் சந்திக்கவுள்ளது.
புதியது பழையவை