மட்டக்களப்பு மாவட்டம் கொக்கட்டிச்சோலை பிரதேசத்தில் வசிக்கும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர் ஒருவருக்கு போலி ஆவணங்களை தயாரித்து வெளிநாட்டுக்கு அனுப்பிய உதவி காவல்துறை அதிகாரி ஒருவர் பயங்கரவாத புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொக்கட்டிச்சோலையில் வசிக்கும் குறித்த தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினருக்கு வெள்ளவத்தையில் உள்ள முகவரிக்கு போலி ஆவணங்களை தயாரித்து வெளிநாடு செல்ல உதவிய குற்றச்சாட்டில் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த முன்னாள் போராளி வெளிநாட்டில் இருந்து இலங்கை திரும்பிய போதே கைது செய்யப்பட்டுள்ளதுடன் விசாரணைகளின் போது தெரியவந்த உண்மைகளின் அடிப்படையில் மேற்படி காவல்துறை அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகத்திற்கிடமான உதவி காவல்துறை அதிகாரி வாழைத்தோட்ட காவல் பிரிவில் கடமையாற்றியவர் எனவும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.