மண்ணில் புதையுண்ட நிலையில் மர்மப்பொருள் மீட்பு!அம்பாறை - சாய்ந்தமருது பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கடற்கரைப்பகுதில் மண்ணில் புதையுண்ட நிலையில் மர்மப்பொருள் ஒன்று இனங்காணப்பட்டுள்ளது.

இன்றைய தினம் (14.03.2023) இனங்காணப்பட்ட குறித்த மர்மப்பொருள் தொடர்பாக  சாய்ந்தமருது பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

குறித்த மர்மப்பொருளைப் பரிசோதனை செய்த விசேட அதிரடிப்படையினர், கேஸ் உள்ள பொருள் என உறுதிப்படுத்தியுள்ளனர்.இனங்காணப்பட்ட மர்மப்பொருள் பழையதா அல்லது வேறு இடத்திலிருந்து எடுத்து வரப்பட்டுள்ளதா என்ற விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த கடற்றொழிலாளர்கள் வழங்கிய தகவலுக்கமைய குறித்த மர்மப்பொருள் மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

புதியது பழையவை