தேர்தல் தினத்தை தீர்மானிக்கும் விசேட கூட்டம்!உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தினத்தை தீர்மானிக்கும் நோக்கில் இன்றைய தினம் விசேட கூட்டமொன்று நடைபெறவுள்ளது.

தேசிய தேர்தல் ஆணைக்குழு இன்றைய தினம் இந்தக் கூட்டத்தை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தேர்தல் ஆணைக்குழுவிற்கு புறம்பான காரணிகளினால் எதிர்வரும் 9ம் திகதி உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்த முடியவில்லை என ஆணைக்குழு அறிவித்திருந்தது.

தேர்தல் நடத்துவது தொடர்பிலான பிரச்சினைகள் குறித்து மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரிகளுடன் அண்மையில் தேர்தல் ஆணைக்குழு பேச்சுவார்த்தை நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, எதிர்வரும் 9ம் திகதி முதல் மூன்று வாரங்களின் பின்னர் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் திகதி நிர்ணயிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
புதியது பழையவை