புழுக்கள் மழையாக பொழிந்து நிரம்பி கிடக்கும் காணொளிகள்



சீனாவின் – தலைநகர் பீஜிங்கில் உள்ள சாலையில், நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்கள் மீது புழுக்கள் மழையாக பொழிந்து நிரம்பி கிடக்கும் காணொளிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

அதுபற்றிய வீடியோவில் வரிசையாக நிற்கும் கார்களின் மீது பெரிய, தடிப்பான, பழுப்பு நிறத்தில் வளைந்தும், நெளிந்தும் போர்வை போன்று புழுக்கள் போன்ற உயிரினம் படர்ந்து காணப்படுகிறது.

அதனால், வானிலிருந்து புழுக்கள் ஏதும் தம்மீது விழுந்து விடக் கூடாது என்பதற்காக சிலர் குடை பிடித்தபடியே பாதுகாப்பாக செல்கின்றனர்.

இந்த வீடியோ காட்சிகள் வைரலாகி வருகின்றன.

எனினும், இந்தக் காணொளி பொய்யானது என அந்நாட்டின் பிரபல பத்திரிகையாளரான ஷென் ஷிவெய் குறிப்பிட்டுள்ளார்.

புழுக்கள் கீழே விழுவது இயல்பானது என்றும் வசந்த காலத்தின்போது இதுபோன்று ஏற்படும் என்று சிலர் கூற ஒரு சிலர், அவை புழுக்கள் அல்ல என்றும் அவை கம்பளிப்பூச்சிகள் என்றும் கூறுகின்றனர்.
புதியது பழையவை