யாழ். குடாநாட்டில் இரவு நேரம் திருட்டுத்தனமாக பசு மாடுகளை இறைச்சிக்காக எடுத்துச் சென்ற மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பலாலி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
நேற்று இரவு ஏழு முப்பது மணி அளவில் வளலாய் விமான நிலைய வீதியில் ரோந்துக் கடமையில் ஈடுபட்டிருந்தபொழுது மருதடி சந்திப் பகுதியில் வைத்து வாகனம் ஒன்று மறித்து சோதனையிடப்பட்டது.
இதன் போது ஐந்து மாடுகளை சிறிய வண்டியில் மிகவும் சித்திரவதை செய்து, திருட்டுத்தனமாக இறைச்சிக்காக எடுத்துச் சென்றமை தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட இவர்கள் கொழும்பு 14 பகுதியைச் சேர்ந்த இரண்டு பேரும் அச்சு வேலி தோப்பு பகுதியைச் சேர்ந்த ஒருவரும் அடங்குவதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
மாடுகள் மிகவும் சித்திரவதை செய்யப்பட்ட நிலையில் ஒன்று பரிதாபமாக உயிரிழந்துள்ளது.
அண்மைக் காலமாக வலிகாமம் பகுதிகளில் மாடுகள் திருடப்படும் சம்பவம் அதிகரித்து செல்கின்றமை தொடர்பில் நாங்கள் சுட்டிக் காட்டி இருந்தோம்.
இந்த நிலையில் தற்பொழுது பலாலி காவல்துறையினர் இரவு நேர ரோந்துக் கடமையை அதிகரித்துள்ளனர்.
இதன் அடிப்படையிலேயே நேற்று இவ்வாறு திருட்டுத்தனமாக பசு மாடுகள் இறைச்சிக்காக எடுத்துச் சென்றமை கண்டுபிடிக்கப்பட்டது.